/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
குறைந்தபட்ச ஆதார விலை: மா.கம்யூ., வலியுறுத்தல்
/
குறைந்தபட்ச ஆதார விலை: மா.கம்யூ., வலியுறுத்தல்
ADDED : ஜன 27, 2025 04:45 AM
விழுப்புரம் : விழுப்புரத்தில் விவசாயிகள் சங்க வாகன பேரணியை தொடங்கி வைத்த மா.கம்யூ., மாநில செயலாளர் சண்முகம் கூறியதாவது:-
மத்திய பா.ஜ., அரசு, வேளாண் விளைபொருட்களை சந்தைப்படுத்துதல் என்ற புதிய கொள்கையை வெளியிட்டுள்ளனர். அதில், குறைந்தபட்ச விலையை தீர்மானிக்கக்கூடிய எவ்வித ஏற்பாடும் இல்லை.
ஏற்கனவே, இந்த சட்டத்தை எதிர்த்து, ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் போராட்டம் நடத்தினோம். அதன் விளைவாகவே மத்திய அரசு அந்த சட்டத்தை திரும்பப்பெற்றது. ஆனால், இப்போது புதியதாக கொள்கை என்ற அடிப்படையில் மறைமுகமாக அதே சட்டத்தை கொண்டு வர முயற்சிக்கிறார்கள். இந்த சந்தைப்படுத்துதல் கொள்கையை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும்.
மத்திய அரசு, அனைத்து வேளாண் விளைபொருட்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலையை உத்தரவாதப்படுத்தக்கூடிய சட்டத்தை இயற்ற வேண்டும். விவசாய கடன்கள் முழுவதையும் நாடு முழுவதுமாக தள்ளுபடி செய்ய வேண்டும். இடுபொருட்களை குறைந்த விலையில் வழங்க வேண்டும். தொழிலாளர்களை பாதிக்கக்கூடிய தொகுப்பு சட்டங்களை திரும்பப்பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.