ஸ்கேட்டிங்கில் தங்கம் வென்ற மாணவிக்கு அமைச்சர் வாழ்த்து
ஸ்கேட்டிங்கில் தங்கம் வென்ற மாணவிக்கு அமைச்சர் வாழ்த்து
ADDED : ஏப் 22, 2026 08:27 PM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற மாணவி மோனிஷா, அமைச்சர் நமச்சிவாயத்தை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
சென்னையில் தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டி நடந்தது. அதில், பெண்களுக்கான 10 முதல் 12 வயதிற்கு உட்பட்ட பிரிவில் புதுச்சேரி சார்பாக பங்கேற்ற மாணவி மோனிஷா, முறையே 200 மீட்டர், 500 மீட்டர், 1000 மீட்டர் ஸ்கேட்டிங் போட்டிகளில் பங்கேற்று மூன்று தங்க பதக்கங்களை வென்றார்.
இதைதொடர்ந்து, புதுச்சேரி திரும்பிய மாணவி மோனிஷா, அமைச்சர் நமச்சிவாயத்தை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
