/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தாவரவியல் பூங்கா புனரமைப்பு பணி அமைச்சர் தேனீ ஜெயக்குமார் பார்வை
/
தாவரவியல் பூங்கா புனரமைப்பு பணி அமைச்சர் தேனீ ஜெயக்குமார் பார்வை
தாவரவியல் பூங்கா புனரமைப்பு பணி அமைச்சர் தேனீ ஜெயக்குமார் பார்வை
தாவரவியல் பூங்கா புனரமைப்பு பணி அமைச்சர் தேனீ ஜெயக்குமார் பார்வை
ADDED : ஆக 30, 2025 07:16 AM

புதுச்சேரி : புதுச்சேரி சுற்றுலாத் தலங்களில் முக்கிய இடமான தாவரவியல் பூங்கா 22 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.
இந்த பூங்கா ரூ. 9.11 கோடி செலவில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு வசதிகளுடன், புனரமைப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
சிறுவர்களுக்கான ரூ.1.16 கோடி செலவில் நவீன பேட்டரியில் இயங்கும் புதிய ரயில் விடப்பட உள்ளது. பார்வையாளர்களின் போக்குவரத்து வசதிக்கு நான்கு மின்சார வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன. கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வரும் புனரமைப்பு பணிகளை அமைச்சர் தேனீ ஜெயக்குமார் நேற்று பார்வையிட்டு, தற்போது நடந்து வரும் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
பின், அவர், கூறுகையில், 'புதுச்சேரியில் தாவரவியல் பூங்கா ஒரு சிறந்த இடமாக உள்ளது. ஸ்மார்ட் சிட்டி மூலம் நிதி ஒதுக்கப்பட்டு துவங்கப்பட்ட புனரமைப்பு பணிகள் தற் போது 90 சதவீதம் முடிவ டைந்துள்ளது. திறப்பு விழா குறித்து முதல்வரிடம் கலந்து ஆலோசித்து அடுத்த மாதம் திறக்கப்படும்.
புனரமைப்பு பணிகளை செய்யும் நிறுவனத்தினரே 3 ஆண்டுகளுக்கு பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும். குழந்தைகளுக்கான ரயில், நிபுணர்கள் சான்றிதழ் வழங்கிய பின் இயக்கப்படும். பெரியவர்களுக்கு ரூ.10, சிறுவர்களுக்கு ரூ.5 பூங்கா நுழைவு கட்டணமாக வசூலிக்கப்படும். பள்ளி மாணவர்களுக்கு 50 சதவீதம் சலுகை வழங்கப்படும்' என்றார்.

