கார்னிவல் கிரிக்கெட் போட்டி அமைச்சர் துவக்கி வைத்தார்
கார்னிவல் கிரிக்கெட் போட்டி அமைச்சர் துவக்கி வைத்தார்
ADDED : ஜன 16, 2025 06:09 AM

காரைக்கால்: காரைக்காலில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கார்னிவல் திருவிழா கிரிக்கெட் போட்டியை அமைச்சர் திருமுருகன் துவக்கி வைத்தார்.
காரைக்கால் மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத்துறை, கலை பண்பாட்டுதுறை மற்றும் வேளாண்துறை இணைந்து காரைக்கால் கார்னிவல் -2025 மற்றும் மலர் கண்காட்சி விழாவின் தொடக்க நிகழ்ச்சியான நேற்று கார்னிவல் கிரிக்கெட் போட்டி நடந்தது.
திருமலைராயன்பட்டினத்தில் உள்ள பி.பி.சி.எல்., விளையாட்டு மைதானத்தில் நடந்த போட்டியை அமைச்சர் திருமுருகன் துவக்கி வைத்தார்.
இப்போட்டியில் காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த 34 அணிகள் பங்கு பெற்றன.
இப்போட்டியில் வெற்றிப்பெரும் வீரர்களுக்கு நிறைவு விழாவில் பரிசுகள் வழங்கப்படும்.
நிகழ்ச்சியில் நாகதியாகராஜன் எம்.எல்.ஏ., துணை ஆட்சியர் அர்ஜுன் ராமகிருஷ்ணன், முதன்மை கல்வி அதிகாரி விஜய மோகனா, உடற்கல்வி இயக்குனர் வெங்கடேஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
