sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ரூ.2 கோடியில் மேம்பாட்டு பணி: அமைச்சர் துவக்கி வைப்பு

 ரூ.2 கோடியில் மேம்பாட்டு பணி: அமைச்சர் துவக்கி வைப்பு

 ரூ.2 கோடியில் மேம்பாட்டு பணி: அமைச்சர் துவக்கி வைப்பு


ADDED : மார் 11, 2026 04:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 11, 2026 04:55 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருக்கனூர்: மண்ணாடிப்பட்டு தொகுதியில் ரூ. 2 கோடி மதிப்பில் சாலை மற்றும் குடிநீர் மேம்பாட்டு பணிகளை அமைச்சர் நமச்சிவாயம் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.

மண்ணாடிப்பட்டு தொகுதி, காட்டேரிகுப்பம், லிங்கா ரெட்டிப்பாளையம், சுத்துக்கேணி, தேத்தாம்பாக்கம், கைக்கிளப்பட்டு, திருக்கனுார், சோம்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் ரூ. 2 கொடியே 1 லட்சத்து 13 ஆயிரம் மதிப்பில் சாலை மேம்படுத்துதல், வாய்க்கால் சீரமைத்தல், புதிய குடிநீர் குழாய் அமைத்தல் மற்றும் அரசு ஆரம்ப பள்ளி வளாகத்தில் 4 வகுப்பறைகள் கட்டுதல் உள்ளிட்ட பணிகளுக்கான பூமி பூஜை நடந்தது.

நிகழ்ச்சிக்கு அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கி, பணிகளை பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.

முன்னாள் எம்.எல்.ஏ., அருள்முருகன், பா.ஜ., மாநில செயற்குழு உறுப்பினர் முத்தழகன், கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில்ராஜன், பள்ளிக்கல்வித் துறை முதன்மை கல்வி அலுவலர் குலசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து, கொ. மணவெளியில் முத்துமாரியம்மன் கோவிலுக்கு ரூ. 1 லட்சம், கொடாத்துார் சக்தி மாரியம்மன் கோவிலுக்கு ரூ. 1 லட்சம், கொடாத்துார் செங்கழுநீர் அம்மன் கோவில் திருப்பணிக்கு ரூ. 2.5 லட்சம் நன்கொடையை அமைச்சர் நமச்சிவாயம் கோவில் நிர்வாகிகளிடம் வழங்கினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us