தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஏரி துார்வாரும் பணி: அமைச்சர் துவக்கி வைப்பு 

ஏரி துார்வாரும் பணி: அமைச்சர் துவக்கி வைப்பு 

ஏரி துார்வாரும் பணி: அமைச்சர் துவக்கி வைப்பு 


UPDATED : ஜூலை 29, 2026 05:35 PM

ADDED : ஜூலை 29, 2026 05:31 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 29, 2026 05:35 PM ADDED : ஜூலை 29, 2026 05:31 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருக்கனுார்: மண்ணாடிப்பட்டு தொகுதியில் 'வளர்ச்சியடைந்த இந்தியா- வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்திற்கான 125 நாள் உத்தரவாத திட்ட பணிகளை அமைச்சர் நமச்சிவாயம் துவக்கி வைத்தார்.

மண்ணாடிப்பட்டு தொகுதியில் வாதானுார், திருக்கனுார், கூனிச்சம்பட்டு, செட்டிப்பட்டு கிராமங்களில் வில்லியனுார் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில், ரூ. 1 கோடியே 51 லட்சத்து 10 ஆயிரத்து 500 மதிப்பில் வளர்ச்சியடைந்த இந்தியா - வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்திற்கான உத்தரவாத 125 நாள் திட்ட பணிகள் (விபி-ஜி, ராம் ஜி) துவக்க விழா நேற்று நடந்தது.

அமைச்சர் நமச்சிவாயம் பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார். மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில்ராஜன், வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.

அப்போது, அமைச்சர்களிடம் அப்பகுதி பெண்கள் திட்டத்தின் கீழ் தொடர்ந்து 125 நாட்கள் பணி வழங்க வேண்டும். வேலைக்கான ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும். செட்டிப்பட்டு கிராமத்திற்கு இயக்கப்படும் தனியார் பஸ்கள் சரியாக இயக்கப்படுவதில், ஆகையால், அரசு மூலம் பி.ஆர்.டி.சி., பஸ் இயக்க நடவடிக்கை வேண்டும். ரேஷன் கார்டுகளுக்கு வழங்கப்படும் இலவச அரிசி தரமற்ற நிலையில் உள்ளதால், அதனை தரமாக வழங்க வேண்டும் என, கோரிக்கை வைத்தனர்.

இதற்கு, அமைச்சர் நமச்சிவாயம் வேலை வாய்ப்பு உத்தரவாத திட்ட பணிகளை உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இலவச அரிசியை தரமாக வழங்கவும், அரசு பஸ் இயக்க முதல்வருடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என, உறுதியளித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us