/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
குளம் துார்வாரும் பணி அமைச்சர் துவக்கி வைப்பு
/
குளம் துார்வாரும் பணி அமைச்சர் துவக்கி வைப்பு
ADDED : மார் 09, 2026 04:07 AM

திருக்கனுார்: காட்டேரிக்குப்பம் மாரியம்மன் கோவில் குளம் தனியார் கம்பெனி சி.எஸ்.ஆர்., நிதியுதவியுடன், துார்வாரும் பணியினை அமைச்சர் நமச்சிவாயம் துவக்கி வைத்தார்.
மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்திற்குட்பட்ட காட்டேரிக்குப்பம் மாரியம்மன் கோவில் குளம், வேர்ல்பூல் நிறுவன சி.எஸ்.ஆர்., நிதியுதவியுடன், நமது தோள்கள் அறக்கட்டளை சார்பில், ரூ. 40 லட்சம் மதிப்பில் துார்வாரப்பட்டு, கரைகளை பலப்படுத்தி நடைப்பாதை அமைக்கும் பணிக்கான துவக்க விழா நடந்தது.
அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கி, பூமி பூஜை செய்து, துார்வாரும் பணியினை துவக்கி வைத்தார். கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில்ராஜன், முன்னாள் எம்.எல்.ஏ., அருள்முருகன், வேர்ல்பூல் நிறுவனத்தினர், நமது தோள்கள் அறக்கட்டளை நிர்வாகிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

