/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மீன்வளர்ப்பு குறித்து செயல்முறை பயிற்சி: அமைச்சர் துவக்கி வைப்பு
/
மீன்வளர்ப்பு குறித்து செயல்முறை பயிற்சி: அமைச்சர் துவக்கி வைப்பு
மீன்வளர்ப்பு குறித்து செயல்முறை பயிற்சி: அமைச்சர் துவக்கி வைப்பு
மீன்வளர்ப்பு குறித்து செயல்முறை பயிற்சி: அமைச்சர் துவக்கி வைப்பு
ADDED : செப் 23, 2025 07:47 AM

காரைக்கால் : காரைக்காலில் என்.ஐ.டி., தொழில் நுட்ப கழகத்தில் மீன்வளர்ப்பு மீன் செயலாக்கம் குறித்து செயல்முறை பயிற்சியை அமைச்சர் லட்சுமி நாராயணன் துவக்கி வைத்தார்.
காரைக்கால் மாவட்டத்தில் தேசிய தொழில்நுட்ப கழகம் என்.ஐ.டி., தொழில்நுட்ப உதவியுடன் மீன் வளர்ப்பு, மீன் செயலாக்கம் மற்றும் மதிப்புக் கூட்டல் செயல்முறை குறித்த நான்கு நாள் தேசிய பயிற்சி துவக்க விழாவை பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் துவக்கி வைத்தார்.
பின்னர் புதுச்சேரி ஒன்றிய பகுதியின் சமூக பொருளாதார முன்னேற்றத்திற்கு ஹப் எனும் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
இது அரசியல் அறிவியல், சமத்துவம் மற்றும் மேம்பாட்டு எஸ்.இ. இ.டி., பிரிவு, அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறை டிஎஸ்டி இந்திய அரசாங்கம் எனும் மூலத்துடன் நிதியளிக்கப்பட் டுள்ளது.
அமைச்சர் லட்சுமி நாராயணன் பேசுகைகயில்., மீனவர்களுக்கு நடத்தப்பட்ட நலத்திட்டங்களை முக்கியமாக எடுத்துரைத்தார்.
மேலும், மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பல புதிய முயற்சிகள் நடந்து வருகிறது எனக் கூறினார்.
பின்னர் பயிற்சி பெற்ற சுய உதவிக்குழுவினர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் திருமுருகன், கலெக்டர் ரவி பிரகாஷ், துணை ஆட்சியர் பூஜா, எஸ்.இ. இ.டி., பிரிவு தலைவர் அனிதா அகர்வால், விஞ்ஞானி ரஜினி ராவத் இணைய வழியாக உரையாற்றினார்.
இதில் என்.ஐ.டி., பேராசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.