/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சாலை அமைக்கும் பணி அமைச்சர் துவக்கி வைப்பு
/
சாலை அமைக்கும் பணி அமைச்சர் துவக்கி வைப்பு
ADDED : ஜூலை 31, 2025 03:08 AM

திருக்கனுார்: மண்ணாடிப்பட்டு தொகுதியில் கொம்யூன் பஞ்சாயத்து சார்பில் சாலை மற்றும் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணியினை அமைச்சர் நமச்சிவாயம் துவக்கி வைத்தார்.
மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து சார்பில், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ. 1 கோடியே 54 லட்சத்து, 40 ஆயிரம் மதிப்பீட்டில் சோம்பட்டு, குமாரப்பாளையம், கொடாத்துார், மணவெளி ஆகிய கிராமங்களில் கழிவுநீர் வாய்க்காலுடன் கூடிய உட்புற சாலைகள் அமைக்கும் பணிக்கான துவக்க விழா நடந்தது.
அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கி, பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்.
கொம்யூன் ஆணையர் எழில்ராஜன், உதவி பொறியாளர் மல்லிகார்ஜுனன், இளநிலை பொறியாளர்கள் ஆனந்தன், மனோகரன், பா.ஜ., நிர்வாகிகள் தமிழ்மணி, சோம்பட்டு சிவா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

