/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சேதராப்பட்டில் சாலை பணி: அமைச்சர் துவக்கி வைப்பு
/
சேதராப்பட்டில் சாலை பணி: அமைச்சர் துவக்கி வைப்பு
ADDED : மார் 31, 2025 07:27 AM

வில்லியனுார் : சேதராப்பட்டு பகுதியில் உள்ள தனலட்சுமி மற்றும் பவானி நகர் பகுதியில் சாலை வசதி ஏற்படுத்த அமைச்சர் பூமி பூஜை செய்து பணியை துவக்கி வைத்தார்.
ஊசுடு தொகுதி சேதராப்பட்டு பகுதியில் உள்ள தனலட்சுமி மற்றும் பவானி நகர் பகுதிக்கு வில்லியனுார் கொம்யூன் பஞ்சாயத்து சார்பில் ரூ.16 லட்சம் செலவில் கருங்கல் சாலை வசதி ஏற்படுத்த ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் சாய்சரவணன்குமார் பூமி பூஜை செய்து பணிகளை துவக்கிவைத்தார்.
இந்நிகழ்ச்சியில் கொம்யூன் பஞ்சாயத்து இளநிலை பொறியாளர் பிரதீப்குமார், தொகுதி பா.ஜ., ஒருங்கிணைப்பாளர் தியாகராஜன், நிர்வாகிகள் முத்தாலு முரளி, புருேஷாத்தம்மன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.