/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கழிவுநீர் வாய்க்கால் பணி அமைச்சர் துவக்கி வைப்பு
/
கழிவுநீர் வாய்க்கால் பணி அமைச்சர் துவக்கி வைப்பு
ADDED : செப் 27, 2025 02:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வில்லியனுார் : மங்கலம் தொகுதி செம்பியப்பாளையம் - கீழுர் சாலையில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணியை வேளாண் அமைச்சர் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
புதுச்சேரி பொதுப்பணித் துறை சார்பில், ரூ. 1.29 கோடி திட்ட மதிப்பில் மங்கலம் தொகுதி செம்பியப்பாளையம் - கீழுர் மெயின் ரோட்டில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடந்தது.
வேளாண் அமைச்சர் தேனீ ஜெயக்குமார் பூமி பூஜை செய்து, பணிகளை துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் சந்திரகுமார், உதவி பொறியாளர் ஜலில், ஒப்பந்ததாரர் துரை அரிராமன் உட்பட பலர் உடனிருந்தனர்.