/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரூ.1.48 கோடி மதிப்பிலான பணிகள் : அமைச்சர் துவக்கி வைப்பு
/
ரூ.1.48 கோடி மதிப்பிலான பணிகள் : அமைச்சர் துவக்கி வைப்பு
ரூ.1.48 கோடி மதிப்பிலான பணிகள் : அமைச்சர் துவக்கி வைப்பு
ரூ.1.48 கோடி மதிப்பிலான பணிகள் : அமைச்சர் துவக்கி வைப்பு
ADDED : நவ 28, 2025 04:34 AM

திருக்கனுார்: மண்ணாடிப்பட்டு தொகுதி பொதுப்பணித்துறை மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து சார்பில், ரூ.1.48 கோடி மதிப்பில் சாலை மற்றும் ஆய்வு மாளிகை மேம்படுத்தும் பணிகளை அமைச்சர் நமச்சிவாயம் துவக்கி வைத்தார்.
சுத்துக்கேணி, சங்கராபரணி ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள பொதுப்பணித்துறையின் ஆய்வு மாளிகை ரூ.33.40 லட்சம் மதிப்பில் புதுப்பிக்கும் பணி துவக்க விழா நேற்று நடந்தது.
விழாவிற்கு, அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கி, பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார். இதில் பா.ஜ., மாநில செயற்குழு உறுப்பினர் முத்தழகன், கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில் ராஜன், பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் சுந்தரமூர்த்தி, நீர்ப்பாசன பிரிவு செயற்பொறியாளர் ராஜ்குமார், உதவி பொறியாளர் லுாய் பிரகாசம் உட்பட பலர் உடனிருந்தனர்.
தொடர்ந்து, மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து மூலம் திருக்கனுார், மண்ணாடிப்பட்டு, வாதானுார், கூனிச்சம்பட்டு கிராமங்களில் ஒரு கோடியே 15 லட்சம் ரூபாய் மதிப்பில் உட்புற சாலைகள் மேம்படுத்தும் பணியினையும் அமைச்சர் துவக்கி வைத்தார்.

