/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கடற்கரை கிராமங்களில் அமைச்சர் ஆய்வு
/
கடற்கரை கிராமங்களில் அமைச்சர் ஆய்வு
ADDED : டிச 01, 2024 04:22 AM

பாகூர்: கடற்கரை கிராமங்களில் புயல் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு பணிகளை, அமைச்சர் லட்சுமி நாராயணன் ஆய்வு செய்தார்.
பெஞ்சல் புயல் காரணமாக புதுச்சேரியில் பலத்த காற்றுடன் கன மழை பெய்து வருகிறது. புயலை எதிர் கொள்ள அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்ககைளை மேற்கொண்டு வருகிறது. பாகூர் தாலுகாவில் 53 புயல் பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. கிருமாம்பாக்கம் பகுதியில் பனித்திட்டு, நரம்பை, மூ.புதுக்குப்பம் - மணப்பட்டு கடற்கரை பகுதியில் பொது மக்கள் செல்ல போலீசார் தடை விதித்துள்ளனர்.
அமைச்சர் லட்சுமிநாராயணன், பனித்திட்டு, நரம்பை, மூ.புதுக்குப்பம் மீனவ கிராமங்களில், பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்தார். புயல் கரையை கடக்கும் வரையில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என, மீனவர்களிடம் தெரிவித்தார்.
மீனவர்கள் கடற்கரை நிறுத்தி வைத்திருந்த படகுகளை பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி வைத்தற்கான செலவு தொகை வழங்க வேண்டும். மீன்பிடி தடைக்கால நிவாரணம் 6 ஆயிரம் ரூபாயில் 3 ஆயிரம் ரூபாய் மட்டும் கொடுத்துள்ளார். மீதி தொகையை வழங்கிட வேண்டும்.
10 நாட்களுக்கும் மேலாக வேலைக்கு செல்லாமல் வாழ்வாதாரம் பாதித்துள்ள நிலையில், நிவாரணம் வழங்கிட வேண்டும்' என்றனர். ஆய்வின் போது, எம்.எல்.ஏ.,க்கள் லட்சுமிகாந்தன், பாஸ்கர் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.