/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாங்கனி திருவிழா இன்று துவக்கம் ஏற்பாடுகளை அமைச்சர் ஆய்வு
/
மாங்கனி திருவிழா இன்று துவக்கம் ஏற்பாடுகளை அமைச்சர் ஆய்வு
மாங்கனி திருவிழா இன்று துவக்கம் ஏற்பாடுகளை அமைச்சர் ஆய்வு
மாங்கனி திருவிழா இன்று துவக்கம் ஏற்பாடுகளை அமைச்சர் ஆய்வு
ADDED : ஜூலை 08, 2025 12:25 AM

காரைக்கால் :  காரைக்காலில் மாங்கனி திருவிழா இன்று (8ம் தேதி)  மாப்பிளை அழைப்புடன் துவங்குகிறது.
காரைக்காலில் உள்ள காரைக்கால் அம்மையார் கோவிலில்  அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் வகையில் ஆண்டு தோறும் மாங்கனி திருவிழா நடக்கிறது. இத்திருவிழா கடந்த 10ம் தேதி பந்தல்கால் முகூர்த்தம் நடப்பட்டது.
இன்று (8ம் தேதி) மாலை சித்தி விநாயகர் கோவிலில் இருந்து மாப்பிள்ளை அழைப்பு, 9ம் தேதி அம்மையார் மணிமண்டபத்தில் மணமகன் பரமதத்தர், அம்மையார்  திருமணம் நிகழ்ச்சி விமர்சையாக நடக்கிறது.
தொடர்ந்து  முக்கிய நிகழ்வாக  10ம் தேதி அதிகாலை  பஞ்சமூர்த்திகளுக்கு மகா அபிமேஷகம் மற்றும் பரமதத்தர் இரண்டு மாங்கனிகளை வீட்டிற்கு கொடுத்து அனுப்பும் நிகழ்ச்சியில் சிவபெருமாள் காவியுடை ருத்திராட்சம் மாலையுடன் பிச்சாண்டவர் கோலத்தில் புறப்படும் நிகழ்ச்சியில் பக்தர்கள் தங்கள் வீட்டின் மாடிகளின் இருந்து மாங்கனி வீசும் நிகழ்ச்சி நடைபெறும். தொடர்ந்து தினமும்  நிகழ்ச்சிகள் நடக்கவுள்ளது.
விழாவை முன்னிட்டு  நேற்று அமைச்சர் திருமுருகன் தலைமையில் அகாரிகளுடன் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. இதில் விழா ஏற்படுகள் குறித்து கோவில் தனி அதிகாரி காளிதாசன் விளக்கினார். விழாவிற்கு வரும் பக்தர்களுக்கு சுத்தமான குடிநீர், கழிப்பறை வசதி,போலீசார் பாதுகாப்பு, முக்கிய இடங்களில் சி.சி.டி.வி.,கேமரா மூலம் கண்காணிப்பு மற்றும் அன்னதானம் உள்ளிட்ட  விழா ஏற்பாடுகள் குறித்து விளக்கப்பட்டது.
துணை கலெக்டர்  ஆர்ஜூன் ராமகிருஷ்ணன்.எஸ்.பி.,சுப்ரமணியன் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

