sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பெண்ணையாறு, சங்கராபரணி ஆறுகளில் உபரி நீரை சேமிக்க கதவணை அமைக்க திட்டம் அமைச்சர் லட்சுமிநாராயணன் தகவல்

/

பெண்ணையாறு, சங்கராபரணி ஆறுகளில் உபரி நீரை சேமிக்க கதவணை அமைக்க திட்டம் அமைச்சர் லட்சுமிநாராயணன் தகவல்

பெண்ணையாறு, சங்கராபரணி ஆறுகளில் உபரி நீரை சேமிக்க கதவணை அமைக்க திட்டம் அமைச்சர் லட்சுமிநாராயணன் தகவல்

பெண்ணையாறு, சங்கராபரணி ஆறுகளில் உபரி நீரை சேமிக்க கதவணை அமைக்க திட்டம் அமைச்சர் லட்சுமிநாராயணன் தகவல்


ADDED : மார் 27, 2025 03:49 AM

Google News

ADDED : மார் 27, 2025 03:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: சட்டசபையில் பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் நேற்று வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:

பொதுப்பணி துறைக்கு ரூ. 526.75 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில், ரூ. 293.65 கோடி கடன் நிதி ஆகும். மொத்த நிதியில் ரூ. 197 கோடி நடப்பு பணிகளுக்கும், ரூ. 329.15 கோடி புதிய பணிகளுக்கு செலவிடப்படும். ரூ. 823 கோடியில் புதிய திட்டங்கள் தயாரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி மண்டலத்திற்கு ரூ. 379 கோடி, காரைக்காலுக்கு ரூ. 103 கோடி, ஏனாமிற்கு ரூ. 25 கோடி, மாகிக்கு ரூ. 19.15 கோடி நடப்பு மற்றும் புதிய பணிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

கழிவுநீர் மற்றும் வடிகால் துறைக்கு புதிய பிரிவு, குடிநீர் வழங்கல் மற்றும் குடிநீர் விநியோக திட்டத்திற்கு தனி பிரிவு உருவாக்கி மறுசீரமைக்க அரசின் ஒப்புதலுக்கு கோப்பு அனுப்பட்டுள்ளது.

பொது சுகாதாரம்


நகர பகுதியில் நிலவும் குடிநீர் உவர்ப்பு தன்மையை தீர்க்க, 300 மீட்டருக்கு அதிகமான ஆழத்திற்கு 40 போர்வேல் ரூ. 20 கோடியில் நிறுவப்படும். இதற்காக சங்கராபரணி ஆற்றின் கரையில் 14 போர்வேல் அமைக்க ரூ. 5.5 கோடிக்கு நிதி உதவி கோரப்பட்டுள்ளது. இதன் மூலம் முத்தியால்பேட்டை, ராஜ்பவன், உருளையன்பேட்டை, உப்பளம், முதலியார்பேட்டை, நெல்லித்தோப்பு, காமராஜர் நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு தரமான குடிநீர் வழங்கப்படும்.

ஏழு இடங்களில் நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் மூலம் குடிநீர் வழங்க ரூ. 31 கோடி கடன் பெறப்பட்டுள்ளது. சுதேசிமில் டேங்க், தாவரவியல் பூங்கா, டாக்டர் அப்துல் கலாம் நகர் நீரேற்று நிலையம், நடேசன் நகர் நீரேற்று நிலையம், பிருந்தாவனம், சித்தானந்தா கோவில் மற்றும் திருக்காஞ்சியில் அமைக்கப்படும்.

ஊசுட்டேரி நீரை பயன்படுத்தி 20 எம்.எல்.டி., நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. வில்லியனுார், முத்திரையார்பாளையம், அமைதி நகர், சாரம் ஜெயராம் நகரில் குடிநீர் வழங்கல் அமைப்பை புதுப்பித்து சீரமைக்க ரூ. 123.25 கோடி ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது.

பாதாள சாக்கடை


சாக்கடை கால்வாய்கள் அடைப்புகளை அகற்ற ரூ. 5.27 கோடி மதிப்பில் 19 கழிவுநீர் சுத்திகரிப்பு இயந்திரம் வாங்க அனுமதி பெற்று, 6 இயந்திரம் வாங்கப்பட்டுள்ளது. கனகன் ஏரி சுத்திகரிப்பு நிலையத்தில் ரூ. 2.39 கோடி மதிப்பில் துர்நாற்றத்தை கட்டுப்படுத்தும் இயந்திரம், காற்றோட்ட அமைப்புகளை மாற்றுவதற்கு ரூ.2.74 கோடிக்கு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

புல்வார்டு பகுதியில் பாதாள சாக்கடைகளை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சுத்தம் செய்ய ரூ. 52 கோடி மதிப்பில் மறுசீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. இத்திட்டம் 9 மாதத்தில் முடியும். அரியாங்குப்பம், முருங்கப்பாக்கம், வில்லியனுாரில் விடுப்பட்ட பகுதிகளுக்கு பாதாள சாக்கடை மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு திட்டத்திற்கு திட்டம் செயல்படுத்தப்படும்.

வில்லியனுார் சங்கராபரணி ஆற்றின் அருகில் ரூ. 36.70 கோடி மதிப்பில் 3 எம்.எல்.டி., கொள்ளவு கொண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும். குழாயில் இருந்து குடிநீர் குடிக்கும் திட்டம், சாலை வசதி, போக்குவரத்து நெரிசலை சமாளிக்கும் கட்டமைப்பு, கடல் நீரை குடிநீராக்கும் ஆலை, உப்பு நீக்கும் ஆலை, பாதாள சாக்கடை கழிவுநீர் அமைப்பு, மரப்பாலம் துவங்கி அரியாங்குப்பம் வரை மேல் அடுக்கு சாலை அமைக்க, அனைத்து பிராந்தியத்திலும் நகர்ப்புற சாலை மற்றும் வடிகால் மேற்கொள்ள ரூ. 4,750 கோடி கடன் பெற்று அடுத்த 5 ஆண்டுகளில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

நீர்பாசனம்


கடல் அரிப்பை தடுக்க நபார்டு வங்கி நிதி உதவியுடன், சின்ன காலாப்பட்டு, பெரிய காலாப்பட்டு, கணபதிசெட்டிக்குளம், பிள்ளைச்சாவடியில் ரூ. 33 கோடி மதிப்பில் தடுப்பு அரண் அமைக்கப்பட்டு வருகிறது.

உப்பனாறு வாய்க்கால் சீரமைப்பதற்கும், அதில் பாதாள சாக்கடை அமைத்து உப்பனாறு வாய்க்காலுக்கு வரும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு எடுத்து செல்ல ரூ. 51.70 கோடியில் திட்டம் தயாரித்து நிதி உதவிக்கு கோப்பு அனுப்பப்பட்டுள்ளது.

தென்பெண்ணை மற்றும் சங்கராபரணி ஆற்றில் வெள்ள காலங்களில் உபரியாக கடலுக்கு செல்லும் தண்ணீரை சேமித்து குடிநீர் மற்றும் விவசாய தேவைகளுக்கு உபயோகப்படுத்த கதவு அணை அமைத்து நீரை தேக்க திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது.

சாலை பணிகள்


இந்திரா சிக்னல் முதல் ராஜிவ் சிக்னலை இணைக்கும் மேம்பாலம் அமைக்கவும், கடலுார் சாலையில் மரப்பாலம் முதல் முள்ளோடை வரை அகலப்படுத்தி மேம்படுத்தவும் ரூ.1,000 கோடி திட்டத்திற்கு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. விரைவில் இப்பணிகள் துவங்கும். புதுச்சேரி மற்றும் காரைக்கால் கிராமப்புறங்களில் 107 கி.மீ., சாலையை மேம்படுத்த ரூ. 67.02 கோடிக்கு அனுமதி பெறப்பட்டுள்ளது.

கட்டட பணிகள்


பழைய சாராய ஆலை வளாகம் ரூ. 5.86 கோடி மதிப்பில் கவர்னர் அலுவலகமாக மாற்றும் பணி முடியும் தருவாயில் உள்ளது. ராஜ் நிவாஸ் மறுசீரமைப்பு கட்டமைப்பு வலுப்படுத்தும் பணிகள் ரூ. 16 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்படும்.

சுப்ரமணிய பாரதியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு 3 மாடி புதிய கட்டடம் ரூ.5.95 கோடி செலவில் நபார்டு நிதி உதவியுடன் மேற்கொள்ளப்படும். கதிர்காமத்தில் கலை கல்லுாரி ரூ. 32.30 கோடியில் கட்டும் பணி இந்தாண்டு மேற்கொள்ளப்படும்.

அரியாங்குப்பத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிக்கான புதிய கட்டடம் ரூ. 4.87 கோடி மதிப்பில் நபார்டு நிதி உதவியுடன் கட்டப்படும் என, கூறினார்.






      Dinamalar
      Follow us