/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மத்திய தரைவழி துறை செயலருடன் அமைச்சர் லட்சுமிநாராயணன் சந்திப்பு
/
மத்திய தரைவழி துறை செயலருடன் அமைச்சர் லட்சுமிநாராயணன் சந்திப்பு
மத்திய தரைவழி துறை செயலருடன் அமைச்சர் லட்சுமிநாராயணன் சந்திப்பு
மத்திய தரைவழி துறை செயலருடன் அமைச்சர் லட்சுமிநாராயணன் சந்திப்பு
ADDED : டிச 20, 2024 04:18 AM

புதுச்சேரி: புதுச்சேரியில், உயர்மட்ட மேம்பாலம் அமைப்பது தொடர்பாக, மத்திய தரைவழி துறை செயலாளரை, அமைச்சர் லட்சுநாராயணன் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
டில்லியில், மத்திய தரைவழிப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை செயலர் உமாசங்கரை, பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
அதில், புதுச்சேரி இந்திரா சதுக்கம் முதல் ராஜிவ் சதுக்கம் வரை, உயர்மட்ட மேம்பாலம் கட்டுவதற்கான அனுமதி வழங்க வேண்டும் என, கேட்டுக்கொண்டார். ஏற்கனவே போதிய நிதி ஒதுக்கப்பட்டு விரிவான திட்ட மதிப்பீடு தயாரித்து அமைச்சகத்தின் பரிசீலனையில் உள்ளது. இந்த திட்டத்திற்கு அனுமதி வழங்கினால், மேம்பாலப் பணிகளை துவக்கலாம் என ஆலோசனை நடத்தினார். மேலும், இந்திரா சதுக்கம் முதல் முள்ளோடை வரை இரண்டு வழிச் சாலையை, நான்கு வழிச் சாலையாக மாற்றி அமைக்கவும், புதுச்சேரியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், கோரிக்கை வைத்தார்.
இது தொடர்பாக, ஆராய்ந்து அனுமதி வழங்க, மத்திய தரைவழிப் போக்குவரத்து அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். சந்திப்பின் போது, பொதுப்பணித்துறை கண்காணிப்புப் பொறியாளர் பாலசுப்ரமணியன், நீர்ப்பாசனக் கோட்ட உதவிப் பொறியாளர் செல்வராசு, தொழில்நுட்ப ஆலோசக பொறியாளர்கள் உடனிருந்தனர்.