/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் சராசரி மழையைவிட 10 செ.மீ., கூடுதல் அமைச்சர் லட்சுமிநாராயணன் தகவல்

ADDED : டிச 01, 2025 05:33 AM
புதுச்சேரி: புதுச்சேரியின் சராசரி மழை காட்டிலும் 10 செ.மீ., கூடுதலாக பெய்துள்ளதாக அமைச்சர் லட்சுமிநாராயணன் தெரிவித்தார்.
புதுச்சேரியில் டிட்வா புயல் பாதிப்புகளை ஆய்வு செய்த அமைச்சர் லட்சுமிநாராயணன் கூறியதாவது: புதுச்சேரியின் சராசரி மழையளவு 1,355 மி.மீ., இதுவரை 1,455 மி.மீ., மழை பெய்துள்ளது. சராசரியை காட்டிலும் 10 செ.மீ., மழை கூடுதலாக பெய்துள்ளது. கனமழை காரணமாக மாநிலத்தில் உள்ள நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. குறிப்பாக அனைத்து படுகையணைகளும் நிரம்பிவிட்டன.
சங்கராபரணியாறு மணலிப்பட்டு, செட்டிப்பட்டு படுகையணைகள் தலா 1.50 மீட்டர் உயரம் கொண்டது. இதில் 1.55 மீட்டர் உயரத்திற்கு தண்ணீர் செல்கிறது. பம்மையாற்றில் சன்னியாசிகுப்பம், சிலுக்காரிபாளையம் படுகையணைகள் தலா 1.50 மீட்டர் உயரம் கொண்டுள்ளன. இவற்றிலும் 1.55 மீட்டர் உயரத்திற்கு தண்ணீர் செல்கிறது. சகடப்பட்டு, சோரப்பட்டு படுகையணைகள் முழு கொள்ளவு உயரமான 2 மீட்டரை எட்டி வழிந்து செல்லுகிறது. இன்னும் மழைக்காலம் உள்ளது. கூடுதலாக மழை பொழிவு இந்தாண்டு இருக்கும்.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.