/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம்
/
அமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம்
ADDED : பிப் 07, 2025 04:13 AM

புதுச்சேரி : புதுச்சேரி காவல்துறை மற்றும் விளையாட்டு துறையில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சி திட்ட மேம்பாட்டு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது.
இக்கூட்டத்திற்கு, அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார். கல்வித் துறை இயக்குநர் பிரியதர்ஷினி, போலீஸ் சீனியர் எஸ்.பி., அனிதா ராய், விளையாட்டுத்துறை துணை இயக்குநர் வைத்தியநாதன் மற்றும் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், காவல்துறையில் செயல்பாடுகளை மேம்படுத்த புதிதாக போலீஸ் ஸ்டேஷன் திறப்பது, போலீஸ் ஸ்டேஷனில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது, விளையாட்டு துறை மூலம் நகரம் மற்றும் கிராமப்புறங்களில் மைதானங்களை மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்து மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

