/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆசிரியர் தகுதி தேர்வு குறித்து சட்டரீதியான நடவடிக்கை அமைச்சர் நமச்சிவாயம் தகவல்

ADDED : செப் 05, 2025 03:02 AM
புதுச்சேரி: முன்னாள் பெண் அமைச்சருக்கு நான் மன அழுத்தம் கொடுப்பதாக சமூக வலைதளத்தில் வரும் கருத்து தவறானது என, அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்.
பள்ளி கல்வித்துறை சார்பில் நடந்த ஆசிரியர் தினவிழாவில் பங்கேற்ற அவர், கூறியதாவது;
ஆசிரியர் தகுதி தேர்வு குறித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளதால் , அது தொடர்பாக சட்டரீதியான நடவடிக்கை குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.
இது தொடர்பாக தமிழக அரசு எடுக்கும் முடிவை பொறுத்து பார்க்கலாம். உதவி பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு தொடர்பான கோப்பு தயாரிக்கப்பட்டு அனுப்பட்டுள்ளது.
வெகுவிரைவில் அதற்கான முடிவுகள் எடுக்கப்படும். முன்னாள் பெண் அமைச்சருக்கு நான் மன அழுத்தம் கொடுப்பதாக சமூக வலைதளத்தில் வரும் கருத்து தவறானது' என்றார்.