/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'தமிழகத்துக்கு பல திட்டங்கள்' அமைச்சர் நமச்சிவாயம் தகவல்
/
'தமிழகத்துக்கு பல திட்டங்கள்' அமைச்சர் நமச்சிவாயம் தகவல்
'தமிழகத்துக்கு பல திட்டங்கள்' அமைச்சர் நமச்சிவாயம் தகவல்
'தமிழகத்துக்கு பல திட்டங்கள்' அமைச்சர் நமச்சிவாயம் தகவல்
ADDED : பிப் 05, 2025 06:10 AM
சேலம்: சேலம், சூரமங்கலம் சற்குரு அப்பா பைத்தியம் சுவாமிகளின், 25ம் ஆண்டு குருபூஜை விழா நேற்று நடந்தது.
இதில் சுவாமிக்கு, சிறப்பு அபி ேஷகம், மலர்களால் அலங்காரம் செய்து, பட்டாடை உடுத்திய பின், அர்ச்சனை, மகா தீபாராதனை நடந்தது.
ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
அங்கு புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் வழிபட்டார். தொடர்ந்து அவர் கூறியதாவது:
ஆண்டுதோறும் குரு பூஜையில் பங்கேற்பது மனதுக்கு சந்தோஷமாக இருக்கிறது.
மத்திய அரசு அறிவித்த பட்ஜெட், தனித்தனி மாநிலத்துக்கு அல்ல. நாடு முழுதுக்குமான பட்ஜெட். இதில் தமிழகத்துக்கு பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, மெட்ரோ ரயில் திட்டத்துக்கு, 60,000 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. பல்வேறு ரயில்வே திட்டங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அனைத்து தரப்பு மக்களும் ஏற்ற பட்ஜெட் என்பதால் வரவேற்கத்தக்கது.
இவ்வாறு அவர் கூறினார்.