UPDATED : மே 18, 2026 07:42 PM
ADDED : மே 18, 2026 07:21 PM
புதுச்சேரி: புதுச்சேரி மாநில அமைச்சராக பொறுப்பேற்றுள்ள நமச்சிவாயம், சட்டசபையில் உள்ள தனது அலுவலகத்தில் முறைபடி அலுவல் பணியினை (மே 18) துவங்கினார்.
புதுச்சேரி சட்டசபை தேர்தலில் என்.ஆர்.காங்., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் 18 தொகுதியில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக்கொண்டது. .
இதையடுத்து, முதல்வராக ரங்கசாமி, அமைச்சர்களாக பா.ஜ.வை சேர்ந்த நமச்சிவாயம், என்.ஆர்.காங்., சேர்ந்த மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகியோர் கடந்த 13ம் தேதி பதவியேற்று கொண்டனர். அவர்களுக்கு கவர்னர் கைலாஷ்நாதன் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
இந்நிலையில், மாநில அமைச்சராக பொறுப்பேற்ற நமச்சிவாயம், நேற்று சட்டசபை வளாகத்தில் உள்ள தனது அலுவலகத்தில் முறைப்படி தனது அலுவல் பணிகளை துவங்கினார்.
அதில், முதலாவதாக மண்ணாடிப்பட்டு தொகுதிக்குட்பட்ட ஆதிதிராவிட மக்களுக்கு இலவச மனைபட்டா வழங்கல், திருக்கனுார் பகுதியில் துணை தாசில்தார் அலுவலகம் அமைத்தல், அமைச்சருக்கு தனி செயலர் நியமித்தல் ஆகிய மூன்று முக்கிய கோப்புகளுக்கு கையெழுத்திட்டார்.
