/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆர்.எஸ்.எஸ்., நுாற்றாண்டு விழா அமைச்சர் நமச்சிவாயம் வாழ்த்து
/
ஆர்.எஸ்.எஸ்., நுாற்றாண்டு விழா அமைச்சர் நமச்சிவாயம் வாழ்த்து
ஆர்.எஸ்.எஸ்., நுாற்றாண்டு விழா அமைச்சர் நமச்சிவாயம் வாழ்த்து
ஆர்.எஸ்.எஸ்., நுாற்றாண்டு விழா அமைச்சர் நமச்சிவாயம் வாழ்த்து
ADDED : அக் 02, 2025 01:52 AM
புதுச்சேரி: ஆர்.எஸ்.எஸ்., நுாற்றாண்டு விழாவிற்கு உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவரது வாழ்த்து செய்தி;
ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக சங்கம் (ஆர்.எஸ்.எஸ்) 1925ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு நுாறு ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
டாக்டர் ஹெட்கேவார் ஆளுமையால் ஸ்தாபிக்கப்பட்ட சங்கத்தில், இணைந்தவர்கள் அனைவருமே சங்க காரியமே தங்கள் வாழ்க்கை என வாழ்ந்தனர். அவர்களின் அர்ப்பணிப்பால் இன்று சங்கம் நாட்டு மக்கள் அனைவரின் நன்மதிப்பையும் பெற்றுள்ளது.
தேசத்தின் ஒருமைப்பாடு, பாதுகாப்பு, சமுதாய நல்லிணக்கம், குடியாட்சி, நம் கலாசாரத்தை பேணி பாதுகாத்தல் போன்வற்றுக்காக காரியகர்த்தகர்கள் செய்த தியாகங்கள் வார்த்தைகளில் அடங்காது.
இதற்காக பலர் தங்கள் இன்னுயிரையும் தியாகம் செய்துள்ளனர். சமுதாயத்தின் எல்லா தரப்பினரையும் தேச சேவையில் ஈடுபட செய்ய சங்கம் மேற்கொள்ளும் முயற்சிக்கு ஒவ்வொருவரும் தோள்கொடுப்போம்.
சங்கத்தின் நுாற்றாண்டு விழாவில் பங்கு கொள்வது நமக்கு கிடைத்த பெரும் பாக்கியம். நல்ல மனிதனை உருவாக்கும் இயக்கமாக, நுாறு ஆண்டுகளை கடந்துள்ள ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக சங்கத்துக்கு எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
தேச ஒற்றுமை வலுப்பெற, நாட்டு மக்கள் அனைவரிடமும் தேசிய சிந்த னை வலுப்பெற சங்கம் இன்னும் பல நுாறு ஆண்டுகள் சிறப்பாக செயல்பட ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக சங்க நிர்வாகிகள் அனைவருக்கும் புதுச்சேரி மாநில மக்கள் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.