/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அமைச்சர் நமச்சிவாயம் 'டிஸ்சார்ஜ்'
/
அமைச்சர் நமச்சிவாயம் 'டிஸ்சார்ஜ்'
ADDED : செப் 27, 2024 05:01 AM
புதுச்சேரி: டெங்கு பாதிப்பால், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் நமச்சிவாயம் நேற்று 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டார்.
உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்உடல்நிலை பாதிக்கப்பட்டு, கடந்த 22ம் தேதி மூலக்குளத்தில் உள்ள ஈஸ்ட் கோஸ்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு, ரத்த பரிசோதனை செய்ததில், டெங்கு ஆரம்ப அறிகுறி உறுதியானதை தொடர்ந்து, அவருக்கு, மருத்துவக்குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். அவரை, கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் போனில் தொடர்பு கொண்டு விசாரித்தனர். நேற்று த.மா.கா., தலைவர் வாசன் நேரில் சென்று உடல்நலம் விசாரித்தார். அதனைத் தொடர்ந்து அவர், மருத்துவமனையில் இருந்து 'டிஸ்சார்ஜ்' ஆனார்.