/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரூ.1.80 கோடியில் வகுப்பறைகள் கட்டும் பணி: அமைச்சர் நமச்சிவாயம் துவக்கி வைப்பு

ADDED : நவ 20, 2025 05:55 AM

புதுச்சேரி: புதுச்சேரி காஞ்சி மாமுனிவர் அரசு பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் ரூ.1.80 கோடி மதிப்பில் புதிதாக வகுப்பறைகள் கட்டுமான பணிகள் துவக்க விழா நேற்று நடந்தது.
அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கி,புதிதாக 3 வகுப்பறைகள், நடைபாதை,படிக்கட்டு மற்றும் இரண்டு மாடி கழிவறைகளுடன் கூடியகட்டுமான பணிகளை பூஜை செய்து துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., அரசு செயலர் முகமது அன்சான் அபீத், உயர்கல்வி மற்றும் தொழில்நுட்ப கல்வி இயக்குநர் அமன் ஷர்மா, ரூசா நோடல் அதிகாரி அசோக், பொது பணித்துறை தலைமை பொறியாளர் வீரசெல்வம், கண்காணிப்பு பொறியாளர் சுந்தரமூர்த்தி, செயற்பொறியாளர் பக்தவச்சலம் உட்பட பலர் பங்கேற்றனர்.
தொடர்ந்து, மின் நுாலகம், ஆய்வுக்கூட மேம்பாட்டு பிரிவு மற்றும் மேம்படுத்தப்பட்ட உடற்பயிற்சிக் கூடம், மீன்வளர்ப்பு, காளான் சாகுபடி, அசோலாசாகுபடி, மண்புழு உரம் தயாரித்தல் மற்றும் மூலிகை தோட்டம் அமைத்தல் உள்ளிட்ட திட்டப் பணிகள் துவக்கி வைக்கப்பட்டன.ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் கோச்சடை நன்றி கூறினார்.