/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'மின்கட்டண பிரச்னையை வைத்து அரசியல் செய்யும் எதிர்க்கட்சிகள்' அமைச்சர் நமச்சிவாயம் ஆவேசம்

ADDED : செப் 22, 2024 01:59 AM
புதுச்சேரி: 'மின் கட்டண பிரச்னையில் எதிர்க்கட்சியினர் அரசியல் செய்கின்றனர்' என அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்.
புதுச்சேரி கடற்கரை சாலை துாய்மை பணியில் பங்கேற்ற அமைச்சர் நமச்சிவாயம் கூறியதாவது:
கடந்த காலத்தில் எதிர்கட்சிகள் சரியாக ஆட்சி செய்திருந்தால் தற்போது மின் கட்டண பிரச்னை ஏற்பட்டிருக்காது.
மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதற்காக மின் கட்டணத்துக்கு அரசு மானியம் வழங்கும் முடிவை எடுத்து அறிவித்துள்ளது. முதல் 200 யூனிட் வரை பழைய மின் கட்டணமே தொடரும் என, அறிவித்துள்ளோம். ஏழை மக்கள் பெரும்பாலானவர்கள் இந்த யூனிட்தான் பயன்படுத்துகின்றனர். இதற்கு மேல் மின்சாரம் பயன்படுத்துபவர்கள் வசதி படைத்தவர்களாக உள்ளனர். எதிர்க்கட்சியினர் ஆளும் கட்சி மீது குறை சொல்ல வேண்டும் என்ற நோக்கில் செயல்படுகின்றனர்.
மக்களை திசை திருப்பி அதை சாதகமாக பயன்படுத்துவது அவர்களின் நோக்கமாக உள்ளது. இதனால் தான் தவறான தகவல்களை பரப்புகின்றனர். இதுதொடர்பாக விரிவான விளக்கத்தை ஓரிருநாளில் அளிப்பேன்.
மின்துறை தனியார்மயத்தை வைத்து எதிர்க்கட்சியினர் அரசியல் செய்ய நினைக்கின்றனர். தனியார்மயம் குறித்த வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. அரசியல் உள்நோக்கத்தோடு அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில், மீண்டும், மீண்டும் தனியார் மயம் பற்றி பேசி வருகின்றனர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.