தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தொகுதி வளர்ச்சி பணிகள் அமைச்சர் ஆலோசனை

தொகுதி வளர்ச்சி பணிகள் அமைச்சர் ஆலோசனை

தொகுதி வளர்ச்சி பணிகள் அமைச்சர் ஆலோசனை


ADDED : நவ 20, 2024 06:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 20, 2024 06:09 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருக்கனுார் : மண்ணாடிப்பட்டு தொகுதியில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சி பணி திட்டங்கள் குறித்து பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

கூட்டத்திற்கு, அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார். கூட்டத்தில், மின்துறை கண்காணிப்பாளர் சண்முகம், ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் இளங்கோவன், இந்து அறநிலையத் துறை ஆணையர் சிவ சங்கரன், நல ஆய்வாளர் ராஜா உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், தொகுதிக்கு உட்பட்ட தேத்தாம்பாக்கம், சந்தை புதுக்குப்பம் கிராமங்களில் ஆதிதிராவிட மக்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அனைத்து கிராமங்களிலும் விளையாட்டு மைதானம் அமைப்பது, கோவில்களை மேம்படுத்துவது, குளங்களை துார் வாருதல், சாலை மற்றும் கழிவுநீர் வாய்க்கால்களை சீரமைத்தல் மின்துறை தொடர்பான பிரச்னைகளை சரி செய்தல் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி பணி திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப் பட்டது.

மேலும், தொகுதியின் அனைத்து வளர்ச்சி பணி திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us