/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சிறுதானிய கண்காட்சி அமைச்சர் பங்கேற்பு
/
சிறுதானிய கண்காட்சி அமைச்சர் பங்கேற்பு
ADDED : ஜன 24, 2025 05:43 AM
புதுச்சேரி: பெங்களூருவில் நடக்கும் சர்வதேச சிறுதானிய உணவு பெருட்கள் கண்காட்சியில் அமைச்சர் தேனீ ஜெயக்குமார் பங்கேற்றார்.
கர்நாடக மாநிலம், பெங்களூருவில், சர்வதேச சிறுதானிய உணவு பொருட் கள் கண்காட்சி நேற்று துவங்கியது.
கண்காட்சியை அம்மாநில முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவக்குமார், வேளாண்துறை அமைச்சர் சாளுவாராய சுவாமி மற்றும் மத்திய சிறு குறு நடுத்தர தொழில்கள், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புகள் துறை அமைச்சர் ேஷாபாகரன்ட்லாஜி ஆகியோர் இணைந்து துவக்கி வைத்தனர்.
இதில் புதுச்சேரி வேளாண் அமைச்சர் தேனீ ஜெயக்குமார் மற்றும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த வேளாண்துறை அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
கண்காட்சியில் புதுச்சேரி விவசாயிகள், 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மூன்று நாட்கள் நடக்கும் கண்காட்சி நாளை நிறைவு பெறுகிறது.