தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அமைச்சர் லேப்டாப் வழங்கல்

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அமைச்சர் லேப்டாப் வழங்கல்

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அமைச்சர் லேப்டாப் வழங்கல்


ADDED : பிப் 10, 2024 06:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 10, 2024 06:16 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வில்லியனுார்: தொண்டமாநத்தம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு அமைச்சர் சாய்சரவணன் குமார் 'லேப்டாப்' வழங்கினார்.

வில்லியனுார் அடுத்த தொண்டமாநத்தம் அன்சாரி துரைசாமி அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் விழா நடந்தது. பொறுப்பாசிரியர் மனோன்மணி தலைமை தாங்கினார். விரிவுரையாளர் மணிகண்டன் வரவேற்றார்.

அமைச்சர் சாய்சரவணன் குமார், பிளஸ் 2 மாணவர்கள் 54 பேருக்கு இலவச லேப்டாப் வழங்கி, பேசினார்.

நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் சிவசங்கரி, விரிவுரையாளர்கள் கவிதா, விஜயலட்சுமி, சரவணன், ஆசிரியர்கள் ஜெகநாயகி, அனிதாமேரி, கலைவாணி, அன்புமதி, மகாதேவன், கண்காணிப்பாளர் லுார்துராஜ், முதுநிலை எழுத்தர் காந்தி உட்பட பலர் பங்கேற்றனர்.

இதேபோல் கூடப்பாக்கம் மற்றும் சேதராப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us