/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அமைச்சரின் கட்சி பதவி பறிப்பு; முதல்வர் ரங்கசாமி அதிரடி
/
அமைச்சரின் கட்சி பதவி பறிப்பு; முதல்வர் ரங்கசாமி அதிரடி
அமைச்சரின் கட்சி பதவி பறிப்பு; முதல்வர் ரங்கசாமி அதிரடி
அமைச்சரின் கட்சி பதவி பறிப்பு; முதல்வர் ரங்கசாமி அதிரடி
ADDED : மே 27, 2025 07:24 AM

காரைக்கால் : அமைச்சர் திருமுருகன் வகித்து வந்த என்.ஆர்.காங்., கட்சியின் காரைக்கால் மாவட்ட தலைவர் பதவி பறிக்கப்பட்டது, கட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
என்.ஆர்.காங்., கட்சியின் காரைக்கால் மாவட்ட தலைவராக அமைச்சர் திருமுருகன் பதவி வகித்து வந்தார். இந்நிலையில், கட்சியின் தலைவரான முதல்வர் ரங்கசாமி ஒப்புதலுடன், அமைச்சர் திருமுருகன் வகித்து வந்த மாவட்ட தலைவர் பதவி பறிக்கப்பட்டு, காரைக்கால் எம்.எம்.ஜி., நகரைச் சேர்ந்த ஆனந்தன் மாவட்ட தலைவராக நியமித்து, கட்சியின் மாநில செயலாளர் ஜெயபால் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து கட்சி வட்டாரத்தில் விசாரித்தபோது, எதிர்வரும் தேர்தலுக்கு கட்சியை தயார் படுத்தும் பொருட்டு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். அமைச்சர் பதவியில் இருந்து கொண்டு கட்சி பணியை பார்ப்பது சிரமமாக இருக்கும் என்பதால், அமைச்சார் திருமுருகன் வகித்து வந்த காரைக்கால் மாவட்ட தலைவர் பதவி, ஆனந்தனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மேலும், மாவட்ட பொறுப்பில் இருந்த அமைச்சர் விரைவில் மாநிலக்குழுவில் முக்கிய பொறுப்பில் நியமிக்கப்பட உள்ளார் என்றனர்.
இருப்பினும், அமைச்சர் திருமுருகன் வகித்து வந்த மாவட்ட தலைவர் பதவி பறிக்கப்பட்ட சம்பவம் கட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.