/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தென்னிந்தியாவின் ஐ.டி., மையமாக புதுச்சேரியை மாற்ற அமைச்சர் ஆலோசனை
/
தென்னிந்தியாவின் ஐ.டி., மையமாக புதுச்சேரியை மாற்ற அமைச்சர் ஆலோசனை
தென்னிந்தியாவின் ஐ.டி., மையமாக புதுச்சேரியை மாற்ற அமைச்சர் ஆலோசனை
தென்னிந்தியாவின் ஐ.டி., மையமாக புதுச்சேரியை மாற்ற அமைச்சர் ஆலோசனை
ADDED : நவ 27, 2025 04:37 AM

புதுச்சேரி: புதுச்சேரியை தென்னிந்தியாவின் ஐ.டி., மையமாக மாற்றுவது குறித்து அமைச்சர் லட்சுமிநாராயணன் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.
தேசிய மென்பொருள் சேவைகள் நிறுவன சங்கத்தின் துணைத் தலைவர் ஸ்ரீகாந்த் சீனிவாசன், இன்டெகரா நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஸ்ரீராம் சுப்ரமணியா, தென்னிந்திய மாநில இயக்குநர் பாஸ்கரன் குமார் வர்மா, புதுச்சேரி ஐ.டி., துறை அரசு செயலர் சவுத்ரி முகமது யாசின், இயக்குநர் சிவ்ராஜ்மீனா ஆகியோர் அமைச்சர் லட்சுமி நாராயணனை சட்டசபையில் நேற்று சந்தித்து பேசினர். அப்போது புதுச்சேரியை தென்னிந்தியாவின் ஐ.டி., மையமாக மாற்றுவது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
குறிப்பாக, புதுச்சேரி தரவு மையம் அமைப்பதற்கான முதலீட்டு வாய்ப்புகள், இளம் தலைமுறைக்கு அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்குவது, பல்வேறு புதிய ஐ.டி., நிறுவனங்களை புதுச்சேரிக்கு கொண்டு வருவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
எதிர்காலத்தில் புதுச்சேரியை ஒரு போட்டி நிலை வாய்ந்த ஐ.டி., மையமாக உருவாக்கும் நோக்கில் குறுகிய கால, மத்திய கால, நீண்ட கால திட்டங்கள் குறித்து அமைச்சரிடம் பிரதிநிதி கள் விவாதித்தனர்.
மேலும் உலக அளவில் முன்னணி ஐடி நிறுவனங்களை ஈர்க்கக்கூடிய தொழில்நுட்ப அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்துதல் பற்றி விவாதித்தனர். அமைச்சர் லட்சுமிநாராயணன், புதுச்சேரியில் இளம் தலைமுறைக்கான வேலை வாய்ப்புகள் அதிகரிக்க வேண்டும். தொழில் முதலீட்டை ஊக்குவிக்க வேண்டும் என, வலியுறுத்தினார்.
அதிகாரிகள் முவைத்த கருத்துக்கள் அனைத்தும் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என, அமைச்சர் உறுதியளித்தார்.

