புதுச்சேரியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சட்டக்கல்லுாரி சார்பில் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் குறித்த பயிற்சி முகாம் துவங்கியது. இன்று நடக்கும் நிறைவு விழாவில், மத்திய சட்டத்துறை அமைச்சர் பங்கேற்கிறார். புதுச்சேரி சட்டக்கல்லுாரி கல்வித்துறை கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது. இதனால் விழாவில் மத்திய சட்டத்துறை அமைச்சர் பங்கேற்கும் தகவல் கல்வித்துறைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி சட்டத்துறை அமைச்சரான லட்சுமிநாராயணனுக்கு தெரிவிக்கவில்லை.
துவக்க விழாவில் பங்கேற்ற அமைச்சர் லட்சுமிநாராயணனுக்கு, மத்திய சட்டத்துறை அமைச்சர் பங்கேற்கும் தகவல் கிடைத்தது. சட்டக் கல்லுாரி கல்வித்துறையின் கீழ் வந்தாலும், மத்திய சட்டத்துறை அமைச்சர் புதுச்சேரி வருவதை, மாநில சட்டத்துறை அமைச்சரான என்னிடம் ஏன் தெரிவிக்கவில்லை சட்டக் கல்லுாரி விழா ஏற்பாட்டாளர்களிடம் கடிந்து கொண்டார்.