/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சென்னையில் 2 மகளிர் விடுதிகள் அமைச்சர் தேனீ ஜெயக்குமார் அறிவிப்பு
/
சென்னையில் 2 மகளிர் விடுதிகள் அமைச்சர் தேனீ ஜெயக்குமார் அறிவிப்பு
சென்னையில் 2 மகளிர் விடுதிகள் அமைச்சர் தேனீ ஜெயக்குமார் அறிவிப்பு
சென்னையில் 2 மகளிர் விடுதிகள் அமைச்சர் தேனீ ஜெயக்குமார் அறிவிப்பு
ADDED : மார் 27, 2025 03:59 AM
புதுச்சேரி: சட்டசபையில் அமைச்சர் தேனீ ஜெயக்குமார் நேற்று வெளியிட்ட புதிய அறிவிப்புகள்:
மகளிர் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை -- ஐந்து வயது முதல் 18 - வயது வரை இறக்கும் குழந்தைகளின் ஈமச்சடங்கிற்காக ரூ.15 ஆயிரம் இந்த நிதியாண்டு முதல் வழங்கப்படும்.
மகளிர் மேம்பாட்டு கழகம்
தற்போது மார்ச் 2025 வரை 122 மகளிர் மேம்பாட்டு பல்நோக்கு ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலியாக உள்ளன. நிர்வாக ஒப்புதல் பெற்ற பிறகு 25 சதவீதம் 31 மகளிர் மேம்பாட்டு பல்நோக்கு உதவியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படும்.
சென்னையில் 2 விடுதிகள்
புதுச்சேரியில் இருந்து சென்னை சென்று படிக்கும், பணி செய்யும் பெண்கள் பயன்படுத்தும் வகையில் சென்னையில் 2 புதிய விடுதிகள் ஆரம்பிக்கப்படும்.
இங்கு பாதுகாப்பு, சுகாதாரமான உணவு வழங்கப்படும். இதற்காக ரூ.40 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும்.
வேளாண் துறை
விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் சிக்கன நீர்ப்பாசனம் செய்ய பி.வி.சி., நிலத்தடி நீர்ப்பாசன குழாய்கள் அமைத்து அரசு மானியம் பெறும் கால இடைவெளி 15 ஆண்டிலிருந்து 7 ஆண்டாக குறைக்கப்படும்.
விவசாயிகள் தங்கள் நிலத்தில் ஆழ்குழாய் கிணறு அமைக்க மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் மானியம் பெறுவதற்கான கால இடைவெளி 5 ஆண்டுகளாக நீடிக்கும்.
அதேபோல் விவசாயிகள் அமைத்த ஆழ்குழாய் கிணற்றில் மின் மோட்டார் பொருத்திக்கொள்ள மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் மானியம் பெறுவதற்கான கால இடைவெளி 5 ஆண்டுகள் நீடிக்கும்.