/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கால்நடைகளுக்கு இழப்பீடு உயர்வு அமைச்சர் தேனீ ஜெயக்குமார் தகவல்
/
கால்நடைகளுக்கு இழப்பீடு உயர்வு அமைச்சர் தேனீ ஜெயக்குமார் தகவல்
கால்நடைகளுக்கு இழப்பீடு உயர்வு அமைச்சர் தேனீ ஜெயக்குமார் தகவல்
கால்நடைகளுக்கு இழப்பீடு உயர்வு அமைச்சர் தேனீ ஜெயக்குமார் தகவல்
ADDED : ஆக 18, 2025 03:56 AM
புதுச்சேரி: காப்பீடு செய்யாத கால்நடைகளுக்கு இழப்பீடு தொகை உயர்த்தி வழங்கப்படும் என, அமைச்சர் தேனீ ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
அவர், கூறியதாவது; கடந்த நிதிநிலை அறிக்கையில், கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை நலத்துறை அமைச்சரின் பரிந்துரையின் பேரில், கால்நடைகளுக்கு வழங்கப்படும் இழப்பீட்டு தொகை 6 ஆயிரத்தில் இருந்து 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என, முதல்வர் அறிவித்திருந்தார்.
அதன்படி கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை நலத்துறை மூலம் கோப்புகள் தயாரிக்கப்பட்டு, தற்போது அரசாணை பெறப்பட்டுள்ளது.
உயர்த்தப்பட்ட இழப்பீடு கடந்த 2023ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து அமலுக்கு வருகிறது.
இந்த தேதிற்கு பின் காப்பீடு இன்றி கால்நடைகள், கறவைப் பசு, எருமை பசு இழந்த கால்நடை பராமரிப்பு துறை மூலம் ஏற்கனவே இழப்பீடு கோரி முறையாக விண்ணப்பித்துள்ள அனைத்து விவசாயிகளுக்கும் உயர்த்தி வழங்கப்பட உள்ளது.
இந்ந திட்டத்தில், இறந்த கால்நடையின் வயது 3 ஆண்டுகளுக்கு மேல் இருக்க வேண்டும். இந்த இழப்பீடு அரசின் நலத்திட்டங்களின் மூலம் அல்லது தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் வாயிலாக ஏற்கனவே காப்பீடு செய்யப்படிருக்கும் மாடுகளுக்கு பொருந்தாது. காப்பீடு செய்ய தகுதியுள்ள கால்நடைகளை வைத்திருக்கும் அவற்றை காப்பீடு செய்ய தவறிய விவசாயிகளுகளின் கால்நடைகளுக்கு பொருந்தாது' என்றார்.