மழை நிவாரணமாக ரூ.1.33 கோடி அமைச்சர் தேனீ ஜெயக்குமார் தகவல்
மழை நிவாரணமாக ரூ.1.33 கோடி அமைச்சர் தேனீ ஜெயக்குமார் தகவல்
ADDED : மார் 07, 2026 05:34 AM
புதுச்சேரி: புதுச்சேரி வேளாண் தொழிலாளர் நல சங்கத்தின் உறுப்பினர்கள் 6,779 பேருக்கு 1.33 கோடி ரூபாய் அரசு சார்பில், வழங்கப்படுகிறது.
இதுகுறித்து அமைச்சர் தேனீ ஜெயக்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
புதுச்சேரி அரசு வேளாண் துறை சார்பில், வேளாண் தொழிலாளர் நல சங்கத்தின் மூலம் இந்தியாவில் முதன் முறையாக முதல்வர் ரங்கசாமி முயற்சியால், வேளாண் தொழிலாளர் நல சங்கத்தில் உறுப்பினராக பதிவு செய்தவர்களுக்கு முதற்கட்டமாக, தற்போது மழைக்கால நிவாரணம் வழங்கப்படுகிறது. புதுச்சேரி வேளாண் தொழிலாளர்களுக்கு தலா ரூ. 2 ஆயிரம் வீதம் 6,779 தொழிலாளர்களுக்கு ரூ. 1 கோடியே 33 லட்சத்து 58 ஆயிரம் அவரவர் வங்கிக் கணக்கில் இன்று (7ம் தேதி) முதல் வரவு வைக்கப்பட உள்ளது. சம்பந்தப்பட்ட வேளாண் தொழிலாளர்கள் அந்த தொகையினை பெற்று பலனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
