/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சட்டசபை தேர்தலை முன்னிட்டு தொகுதியில் குடியேறும் அமைச்சர்
/
சட்டசபை தேர்தலை முன்னிட்டு தொகுதியில் குடியேறும் அமைச்சர்
சட்டசபை தேர்தலை முன்னிட்டு தொகுதியில் குடியேறும் அமைச்சர்
சட்டசபை தேர்தலை முன்னிட்டு தொகுதியில் குடியேறும் அமைச்சர்
ADDED : ஏப் 16, 2025 05:47 AM
புதுச்சேரி : சட்டசபை தேர்தலை முன்னிட்டு, தொகுதியில் அமைச்சர் குடியேறுவதால், தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
வில்லியனுார் தொகுதியில் போட்டியிட்டுவந்த அமைச்சர் நமச்சிவாயம், கடந்த 2021சட்டசபை தேர்தலில் பா.ஜ.,வில் இணைந்ததால், தொகுதி மாறி மண்ணாடிப்பட்டு தொகுதியில், என்.ஆர்.காங்., பா.ஜ., கூட்டணி சார்பில் போட்டியிட்டார். தேர்தலையொட்டி, திருக்கனுார் பகுதியில் குடியேறிய அமைச்சர், தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, திருக்கனுாரில்இருந்து கொடாத்துார்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் குடியேறி மக்கள் பணிகளை மேற்கொண்டு வந்தார்.
சில மாதங்கள் கழிந்து, வில்லியனுார் மணவெளியில் உள்ள தனது வீட்டிற்கு சென்று வசித்து வரும் அமைச்சர். மண்ணாடிப்பட்டு தொகுதியில் அரசின் நலத்திட்ட பணிகள் துவக்கம், கட்சியினரின் வீட்டு விஷங்களுக்கு என, அவ்வப்போது வில்லினுாரில் இருந்து தொகுதிக்கு வந்து செல்கிறார்.
இதனால், தொகுதி மக்கள் அமைச்சரை நேரில் சந்தித்து குறைகளை தெரிவித்து, நிவர்த்தி செய்து கொள்ள முடியாத நிலை இருந்து வருகிறது.
இந்நிலையில் சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு 2026ல் நடக்க உள்ள நிலையில், தேர்தலை முன்னிட்டு தொகுதி மக்களிடம் நெருக்கத்தை ஏற்படுத்தும் வகையில், தற்போது மீண்டும் மண்ணாடிப்பட்டு தொகுதியில் குடியேறி மக்கள் பணிகளை மேற்கொள்ள முடிவு செய்துள்ளார்.
அதற்காக, மண்ணாடிப்பட்டு தொகுதி திருக்கனுாரில் தற்போது புதிதாக கட்டப்பட்டுள்ள வீட்டிற்கு, தனது குடும்பத்துடன் இன்று (16ம் தேதி) குடியேற உள்ளார்.
தேர்தல் நேரத்தில் அமைச்சர் தொகுதியில் குடியேறுவதால், பா.ஜ., பிரமுகர்கள், தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

