/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காரைக்கால் மீனவர்களை விடுவிக்க அமைச்சர் கடிதம்
/
காரைக்கால் மீனவர்களை விடுவிக்க அமைச்சர் கடிதம்
ADDED : அக் 01, 2025 07:08 AM
புதுச்சேரி : மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்ப தாவது:
காரைக்காலைச் சேர்ந்த 12 மீனவர்கள் கடந்த 25ம் தேதி அதிகாலை கடலுக்கு மீன்பிடிக்க சென்ற போது, இயந்திர கோளாறு காரணமாக, படகு இலங்கை எல்லைக்குள் சென்றது. 28ம் தேதி அதிகாலை 2:40 மணியளவில் இலங்கை கடற்படையினரால் 12 மீனவர்களுடன் மீன்பிடி படகு சிறைபிடிக் கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தால் காரைக்கால் பகுதி மீனவ மக்கள் அனைவரும் மிகுந்த துயரத்திலும், மன வேதனையிலும் உள்ளனர்.
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீன்பிடி படகுடன் 12 மீனவர்கர்ளை விடுவிக்க, மத்திய அமைச்சர் தலையிட்டு துாதரகத்தின் மூலம் இலங்கை அரசை தொடர்பு கொண்டு, அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.