/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அமைச்சர் ஆதரவாளர்கள் திடீர் சாலை மறியல்
/
அமைச்சர் ஆதரவாளர்கள் திடீர் சாலை மறியல்
ADDED : ஜூன் 28, 2025 07:09 AM

புதுச்சேரி : பா.ஜ., அமைச்சர் சாய் சரவணன் குமார் பதவியை ராஜினாமா செய்ததை கண்டித்து அவரது ஆதரவாளர்கள் இந்திரா சதுக்கத்தில், சாலை மறியலில் ஈடுப்பட்டதால் பரபரப்பு நிலவியது.
புதுச்சேரி பா.ஜ., அமைச்சராக சாய் சரவணன் குமார், நேற்று அவரது பதவியை ராஜினாமா செய்தார். இதனை கண்டித்து அவரது ஆதாரவாளர்கள் இந்திரா சதுக்கம் அருகில் நேற்று இரவு 8:00 மணியளில் திடீர் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.
தகவலறிந்த ரெட்டியார்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து, சாலை மறியலில் ஈடுப்பட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அதில் பா.ஜ., அமைச்சரை ராஜினாமா செய்ய வலியுறுத்தியது வேதனை அளிக்கிறது.
அவருக்கு பா.ஜ., மாநில தலைவர் பதவியை வழங்க வேண்டும் என, கேட்டுக் கொண்டனர். போலீசார் பேசி சமாதானம் செய்ததை அடுத்து, மறியல் கைவிடப்பட்டது. இந்த திடீர் சாலை மறியலால் நகரப்பகுதியில் போக்குவரத்து பாதித்தது.