தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/திருமுருகனுக்கு அமைச்சர் பதவி; காரைக்காலில் கொண்டாட்டம்

திருமுருகனுக்கு அமைச்சர் பதவி; காரைக்காலில் கொண்டாட்டம்

திருமுருகனுக்கு அமைச்சர் பதவி; காரைக்காலில் கொண்டாட்டம்


ADDED : மார் 06, 2024 03:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 06, 2024 03:19 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காரைக்கால் : திருமுருகனுக்கு அமைச்சர் பதவி வழங்கியதையடுத்து, காரைக்காலில் அவரது ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினார்.

புதுச்சேரி அரசில் காரைக்கால் மாவட்டம், நெடுங்காடு (தனி) தொகுதி என்.ஆர்.காங்., எம்.எல்.ஏ., சந்திரபிரியங்கா, போக்குவரத்து துறை, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக பதவி வகித்தார்.கடந்த ஆண்டு சந்திரபிரியங்காவை அமைச்சர் பதவியில் இருந்து பதவி நீக்கம் செய்து முதல்வர் ரங்கசாமி, கவர்னரிடம் கடிதம் வழங்கினார். சந்திரபிரியங்காவின் அமைச்சர் பதவி நீக்கத்தை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டார். சந்திரபிரியங்கா வகித்து வந்த துறைகளை முதல்வரே கவனித்து வந்தார்.

இதனிடையே காரைக்கால் வடக்கு தொகுதி என்.ஆர்.காங்., எம்.எல்.ஏ., திருமுருகனை அமைச்சராக நியமிக்க முதல்வர் ரங்கசாமி, ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பினார். ஜனாதிபதி அதனை ஏற்றுக் கொண்டார். அதற்கான அரசாணை மத்திய அரசின் உள்துறை இணை செயலாளர் அசுகோஷ் அக்னிகோத்ரி வெளியிட்டுள்ளார்.

இதையடுத்து காரைக்காலில் அவரது ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து, பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். பின்னர் ஏழை மாரியம்மன் கோவில் சிறப்பு பூஜைகள் செய்தனர். பின், முதல்வர் ரங்கசாமிக்கு நன்றி தெரிவித்து கோஷம் எழுப்பினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us