ADDED : அக் 22, 2026 08:56 PM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரி கடற்கரையில் தவற விட்ட மொபைலை போலீசார் உரியவரிடம் ஒப்படைத்தனர்.
காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் கமலக்கண்ணன்,30; இவர் புதுச்சேரிக்கு இன்று (அக்.,22) சுற்றுலா வந்தார். பாண்டி மெரினா கடற்கரைக்கு சென்றவர் ரூ.70 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தனது மொபைலை தவற விட்டார். அந்த பகுதியில் கிடந்த மொபைலை பொதுமக்கள் எடுத்து வந்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
அங்கு பணியில் இருந்த போலீசார்கள், மைக்கேல்ராஜ், பார்த்திபன், சுந்தர், முகிலன் ஆகியோர் மொபைலை தவற விட்ட நபர் யார் என்பது குறித்து, விசாரித்தனர். அதில், கமலக்கண்ணனின் மொபைல் என்பது தெரிந்ததால், அவரிடம் போலீசார் மொபைலை ஒப்படைத்தனர்.
