தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வாய்க்காலில் மாயமான வாலிபர்: ட்ரோன் மூலம் தேடும் பணி

வாய்க்காலில் மாயமான வாலிபர்: ட்ரோன் மூலம் தேடும் பணி

வாய்க்காலில் மாயமான வாலிபர்: ட்ரோன் மூலம் தேடும் பணி


ADDED : டிச 04, 2024 07:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 04, 2024 07:55 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி : துத்திப்பட்டு வாய்க்காலில் விழுந்த வாலிபரை ட்ரோன் மூலம் போலீசார் தேடி வருகின்றனர்.

வழுதாவூர் பக்கிரிப்பாளையம், ரைஸ்மில் தெருவைச் சேர்ந்தவர் தீபன்ராஜ், 32; அவரது நண்பர்களான பிரபாகரன், குப்புசாமி ஆகியோருடன் கடந்த 1ம் தேதி மழையை சுற்றி பார்க்க துத்திப்பட்டு சுத்துக்கேணி, ஊசுட்டேரி வாய்க்கால் சென்றனர்.

துத்திப்பட்டு சுத்துக்கேணி வாய்க்கால் அருகே இயற்கை உபாதை கழிக்க சென்றபோது வழுக்கி வாய்க்காலில் விழுந்துள்ளார்.மழைநீர் அதிக அளவில் சென்றதால் தீபன்ராஜ் அடித்து செல்லப்பட்டார். 2 நாட்களாக தீயணைப்பு மற்றும் போலீசார் சம்பவ இடத்தில் தேடும் பணியில் ஈடுப்பட்டனர். ஆனால் தீபன்ராஜ் கிடைக்கவில்லை.

நேற்று சேதராப்பட்டு போலீசார் ட்ரோன் மூலம் தேடும் பணியில் ஈடுப்பட்டனர்.

இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்இன்ஸ்பெக்டர் ராஜேஷ் ஆகியோர் ட்ரோன் மூலம் துத்திப்பட்டு வாய்க்கால் உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டனர். ஆனால் தீபன்ராஜ் கிடைக்கவில்லை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us