தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கடற்கரையில் தவறவிட்ட கைப்பை உரியவரிடம் ஒப்படைப்பு 

கடற்கரையில் தவறவிட்ட கைப்பை உரியவரிடம் ஒப்படைப்பு 

கடற்கரையில் தவறவிட்ட கைப்பை உரியவரிடம் ஒப்படைப்பு 


ADDED : ஆக 27, 2026 07:43 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 27, 2026 07:43 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி கடற்கரையில் தவறவிட்ட கைப்பையில் இருந்த பணம் மற்றும் வெள்ளி பொருட்களை போலீசார் உரியவரிடம் ஒப்படைத்தார். 

புதுச்சேரி கடற்கரை சாலை காந்தி திடலில் லைப் கார்டு ரமேஷ் மற்றும் கடலோர போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது, மாலை கடற்கரை சாலையில் கைப்பை ஒன்று கீழே கிடந்தது. அதில், ரூ. 6 ஆயிரம் ரொக்கம், வெள்ளி பொருட்கள் இருந்தன. அதைகண்ட, அவர்கள் கைப்பையை எடுத்து, கடலோர போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் வேல்முருகனிடம் ஒப்படைந்தனர். 

இதையடுத்து, போலீசார் கைப்பை யாருடையது என விசாரணை நடத்தினர். அதில், கோட்டக்குப்பத்தை சேர்ந்த அமித் நாச்சிமா  என்பவருடையது என தெரியவந்தது. 

தொடர்ந்து, போலீசார் கைப்பையை தவறவிட்ட அமித் நாச்சிமாவை காந்தி திடலுக்கு வரவழைத்து, கைப்பையில் இருந்த பொருட்கள் சரியாக உள்ளதா என சோதனை செய்து ஒப்படைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us