/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
எம்.ஐ.டி., கல்லுாரி டீனுக்கு ஐ.எஸ்.டி.இ.,தேசிய விருது
/
எம்.ஐ.டி., கல்லுாரி டீனுக்கு ஐ.எஸ்.டி.இ.,தேசிய விருது
எம்.ஐ.டி., கல்லுாரி டீனுக்கு ஐ.எஸ்.டி.இ.,தேசிய விருது
எம்.ஐ.டி., கல்லுாரி டீனுக்கு ஐ.எஸ்.டி.இ.,தேசிய விருது
ADDED : ஏப் 09, 2025 07:05 AM

புதுச்சேரி : புதுச்சேரி கலிதீர்த்தாள்குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லுாரி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறை டீன் வள்ளிக்கு, உயரிய ஐ.எஸ்.டி.இ., தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்திய தொழில்நுட்பக் கல்விச் சங்கத்தின் 54வது தேசிய மாநாட்டில், கோவை குமரகுரு தொழில்நுட்பக் கல்லுாரி நிர்வாகத்தின் மூலம் பொறியியல் மற்றும் தொழில் நுட்பத்தில் புதுமையான ஆராய்ச்சிப் பணிகளுக்கான 2024ம் ஆண்டு தேசிய விருது வழங்கப்பட்டது.
இதில், சுகாதார பராமரிப்பில் புதுமையான ஆராய்ச்சி பணிகளை மேற்கொண்டதற்காக எம்.ஐ.டி., கல்லுாரியின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத்துறை டீன் வள்ளிக்கு, உயரிய ஐ.எஸ்.டி.இ., தேசிய விருது வழங்கப்பட்டது.
உயரிய விருது பெற்று கல்லுாரிக்கு பெருமை சேர்த்த டீன் வள்ளியை, மணக்குள விநாயகர் கல்விக் குழுமத் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன், கல்லுாரி முதல்வர் மலர்க்கண் ஆகியோர் பாராட்டி, கவுரவித்தனர்.
சமீபத்தில், டீன் வள்ளிக்கு, மாநிலம் மற்றும் சமூகத்தின் வளர்ச்சியில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த கூடிய புதுமையான தயாரிப்பிற்கான விருது, கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் வழங்கியது குறிப்பிடத்தக்கது.