/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
எம்.ஐ.டி., கல்லுாரியில் வேலை வாய்ப்பு முகாம்
/
எம்.ஐ.டி., கல்லுாரியில் வேலை வாய்ப்பு முகாம்
ADDED : நவ 10, 2024 04:26 AM

புதுச்சேரி : எம்.ஐ.டி., கல்லுாரியில் சதர்லேண்ட் நிறுவனத்தின் வளாக வேலை வாய்ப்பு முகாம் நடந்தது.
கலிதீர்த்தாள்குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (எம்.ஐ.டி., கல்லுாரி) ஒவ்வொரு ஆண்டும் வேலை வாய்ப்புகளை வழங்கி வருகிறது.
கடந்த கல்வியாண்டில், டி.சி.எஸ்., சி.டி.எஸ்., மற்றும் எம்.என்.சி., நிறுவனங்களிடமிருந்து 715 பணி நியமன ஆணைகளை பெற்றுத் தந்துள்ளது.
இக்கல்லுாரியில் சதர்லேண்ட் நிறுவனம் சார்பில், வளாக வேலை வாய்ப்பு முகாம் நடந்தது. முகாமில் நிறுவன மனிதவள மேலாளர் சோனியா தலைமையில் நேர்முக தேர்வு நடந்தது.
மணக்குள விநாயகர் கல்வி குழும நிர்வாக இயக்குனர் தனசேகரன், செயலாளர் நாராயணசாமி, பொருளாளர் ராஜராஜன் ஆகியோர் தலைமை தாங்கினர். கல்லுாரி முதல்வர் மலர்க்கண் முகாமினை துவக்கி வைத்தார். வேலைவாய்ப்பு துறை அதிகாரி ஜெயக்குமார் உள்ளிட்ட துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதில் எம்.ஐ.டி.கல்லுாரியில் இறுதி ஆண்டு படிக்கும் 500க்கும் மேற்பட்ட பி.டெக்., எம்.பி.ஏ., மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
ஏற்பாடுகளை கல்லுாரி வேலைவாய்ப்பு துறை அதிகாரி ஜெயக்குமார் செய்திருந்தார்.