UPDATED : நவ 17, 2026 05:52 PM
ADDED : நவ 17, 2026 05:52 PM

புதுச்சேரி: உருளையன்பேட்டை தொகுதியில் மேற்கொள்ள வேண்டிய மேம்பாட்டு பணிகள் குறித்து, நகராட்சி ஆணையருடன், நேரு எம்.எல்.ஏ.,ஆலோசனை நடத்தினார்.
புதுச்சேரி நகராட்சி அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், நேரு எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். அப்போது, அவர், ‘உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட பெரிய மார்க்கெட்டை நவீனப்படுத்துதல், புதிய பஸ் நிலையத்தில் உள்ள குறைபாடுகள் சரி செய்தல், பி.ஆர்.டி.சி., பஸ்கள், புதிய பஸ் நிலையம் வழியாக பணி மனைக்கு செல்ல நடவடிக்கை எடுத்தல், புதிய பஸ் நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குவது, சுப்பராய பிள்ளைக்கு சிலை அமைத்தல், தொகுதி முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் அமைத்தல், அண்ணா திடல் விளையாட்டு மைதானம் அருகிலுள்ள பள்ளி மாணவ மாணவிகள் விளையாட ஏதுவாக அடிப்படை வசதிகள் செய்து கொடுத்தல், வாய்க்கால்களை துார்வாருதல்.
கொசு மருந்து அடித்தல், கிடப்பில் உள்ள அங்கன்வாடி கட்டுமான பணிகளை முடித்து விரைந்து முடித்தல் மற்றும் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் மேற்கொள்ள வேண்டிய பணிகளை துவங்குவது குறித்து நகராட்சி ஆணையரர் அருண் அய்யாவு உடன் ஆலோசனை நடத்தினார்.
நகராட்சி செயற்பொறியாளர் சிவபாலன், உதவி பொறியாளர் நமச்சிவாயம், உட்பட பலர் உடனிருந்தனர்.
