/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'என் மீது சேற்றை வாரி வீசுகிறார்' நாராயணசாமி மீது எம்.எல்.ஏ., தாக்கு

ADDED : நவ 24, 2024 04:42 AM
புதுச்சேரி : தொகுதியை விட்டுக் கொடுத்து நாராயணசாமியை முதல்வராக்கிய என் மீது சேற்றை வாரி வீசுகிறார் என, ஜான்குமார் எம்.எல்.ஏ., தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
புதுச்சேரியில் சட்டசபை தேர்தலில் போட்டியிடாமல் முதல்வர் பதவிக்கு வந்தவர் நாராயணசாமி. அவருக்கு நான்தான் தொகுதியை விட்டுக்கொடுத்து வெற்றி பெறச்செய்தேன். தொகுதியை விட்டுக்கொடுத்து நாராயணசாமியை முதல்வராக்கிய என் மீது சேற்றை வாரி வீசுகிறார்.
எங்க பாசை என் தொகுதிக்கு கூட்டி வந்தேன். மாணவர்களுக்கும், ஏழை மக்களுக்கும் நன்மை கிடைக்க வேண்டும் என்பதற்காக கூட்டி வந்தேன். இதில் என்ன தவறு உள்ளது. அவர் தேர்தலில் போட்டியிடனுமா, கட்சி தொடங்குவாரா என அவர்தான் பதில் கூற வேண்டும்.
அவர் தொடர்ந்து புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்க வருகை தர உள்ளார். நான் நாராயணசாமிக்கு தொகுதியை விட்டு கொடுக்கும் போது, முதல்வர் ரங்கசாமி, நாராயணசாமி யாருக்கும் எதையும் செய்ததில்லை. அவரை நம்ப வேண்டாம் என, கூறினார். அதை கேட்காமல் அவருக்காக தொகுதியை விட்டு கொடுத்தேன். நான் என்.ஆரின் பேச்சை கேட்டு இருக்க வேண்டும்' என்றார்.