/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பச்சிளம் குழந்தைக்கு எம்.எல்.ஏ., ரத்த தானம்
/
பச்சிளம் குழந்தைக்கு எம்.எல்.ஏ., ரத்த தானம்
ADDED : அக் 30, 2024 04:31 AM

புதுச்சேரி : புதுச்சேரியில் பிறந்து மூன்று தினங்களான, மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு, சம்பத் எம்.எல்.ஏ., ரத்ததானம் செய்து, காப்பாற்றினார்.
நாவற்குளம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி இலக்கியா. இந்த தம்பதிக்கு சமீபத்தில் தனியார் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது.அந்த குழந்தை பிறந்துமூன்று தினங்களுக்கு பிறகு, மஞ்சள் காமாலை நோயால், கடுமையாக பாதிக்கப்பட்டதால்,உடனடியாக, 400 மி.லி., அரிய வகை, 'ஓ-நெகட்டிவ்' ரத்தம் தேவைப்பட்டது.
குழந்தையின் பெற்றோர், குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் உள்ளிட்டோரிடர் முயற்சித்தும், ரத்த வங்கிகளை அணுகியும் தேவை பூர்த்தியாகவில்லை.
இந்நிலையில், தி.மு.க., இளைஞரணி சார்பில் செயல்பட்டு வரும், ரத்த கொடையாளர்கள் அமைப்பை தொடர்பு கொண்டனர். இதைத்தொடர்ந்து சம்பத் எம்.எல்.ஏ., குழந்தையின் பெற்றோரைசந்தித்தார்.
அவரது ரத்த பிரிவு, 'ஓ-நெகட்டிவ்' என்பதால் அவரே மருத்துவமனையில், குழந்தைக்கு ரத்த தானம் செய்தார்.
குழந்தை தற்போது நலமாக உள்ள நிலையில், விரைவில் அனுப்பி வைக்கப்பட உள்ளதாக, மருத்துவமனை டாக்டர்கள் அவரிடம் தெரிவித்தனர்.

