/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அதிகாரிகளுடன் எம்.எல்.ஏ., ஆலோசனை
/
அதிகாரிகளுடன் எம்.எல்.ஏ., ஆலோசனை
ADDED : அக் 05, 2024 04:06 AM

வில்லியனுார்: தொகுதியில் விடுபட்டுள்ள அடிப்படை வசதிகள் செய்வது குறித்து வில்லியனுார் கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகளுடன், சிவா எம்.எல்.ஏ., ஆலோசனை கூட்டம் நடத்தினார்.
வில்லியனுார் எம்.எல்.ஏ., அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் சிவா தலைமை தாங்கினார். வில்லியனுார் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் (பொ) ரமேஷ், செயற்பொறியாளர் திருநாவுக்கரசு, இளநிலைப் பொறியாளர் சத்தியநாராயணா உட்பட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் வில்லியனுார் தொகுதிக்கு உட்பட்ட தில்லை நகர், வி.மணவெளி, எஸ்.எம்.வி. புரம், சுல்தான்பேட்டை ரகமத் நகர், ஒதியம்பட்டு, நடராஜன் நகர், மூலக்கடை, முத்துப்பிள்ளைபாளையம், பட்டானிக்களம், ஓம்சக்தி நகர், வசந்தம் நகர், உத்திரவாகினி பேட், பெரிய பேட், அம்பேத்கர் நகர், ஆத்துவாய்க்கால் பேட் ஆகிய பகுதிகளில் கொம்யூன் பஞ்சாயத்து சார்பில் சாலைகள், கழிவுநீர் வாய்க்கால், குடிநீர் குழாய் அமைத்தல் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தினார்.