UPDATED : நவ 06, 2026 07:15 PM
ADDED : நவ 05, 2026 07:19 PM

புதுச்சேரி: உருளையன்பேட்டை தொகுதி மக்களுக்கு, விலையில்லா தீபாவளி பரிசு பொருட்கள் வழங்கும் பணியை, நேரு எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.
புதுச்சேரியில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும், ரேஷன் கடைகளின் மூலமாக விலையில்லா தீபாவளி பரிசு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, உருளையன்பேட்டை தொகுதி மக்களுக்கு, தீபாவளி பரிசு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி கண்டக்டர் தோட்டம், பிரியதர்ஷினி நகர் உள்ளிட்ட பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் நடந்தது.
இதில், மனித நேய மக்கள் சேவை இயக்க நிறுவனத் தலைவர் நேரு எம்.எல்.ஏ., கலந்து கொண்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு தீபாவளி பரிசு பொருட்கள் வழங்கும் பணியை துவக்கி வைத்தார்.
இதன் மூலமாக, உருளையன்பேட்டை தொகுதியில் உள்ள 7,500க்கும் மேற்பட்ட ரேஷன் அட்டைதாரர்கள் பயன் பெறுவார்கள். நிகழ்ச்சியில், மனித நேய மக்கள் சேவை இயக்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.
