/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
துாய்மை பணியாளர்களுக்கு உணவு சம்பத் எம்.எல்.ஏ., கோரிக்கை
/
துாய்மை பணியாளர்களுக்கு உணவு சம்பத் எம்.எல்.ஏ., கோரிக்கை
துாய்மை பணியாளர்களுக்கு உணவு சம்பத் எம்.எல்.ஏ., கோரிக்கை
துாய்மை பணியாளர்களுக்கு உணவு சம்பத் எம்.எல்.ஏ., கோரிக்கை
ADDED : அக் 25, 2025 07:27 AM
புதுச்சேரி: துாய்மை பணியாளர்களுக்கு தமிழகத்தை போல் மூன்று வேலை உணவு இலவசமாக வழங்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சம்பத் எம்.எல்.ஏ., கோரிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை:
புதுச்சேரியின் அழகையும், சுகாதாரத்தையும் பராமரிப்பதில் துாய்மை பணியாளர்களின் பங்கு மிக முக்கியமானது. நகராட்சி ஊழியர்கள் வாய்க்கால்களை பராமரித்து, தனியார் நிறுவன ஊழியர்கள் குப்பைகள், கழிவு பொருட்களை அகற்றும் பணியினை செய்து வருகின்றனர்.
இதற்கிடையே, நகராட்சியில் உள்ள காலி பணியிடங்கள் நிரப்பப்படாததால், குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்கள் மிகுந்த சிரமத்துடன் வாய்க்கால்கள் துார் வாரும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த ஊழியர்கள் அனைவரும் ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களுக்கு போதுமான உணவு சரியான நேரங்களில் கிடைப்பதில்லை. இந்நிலையில், தமிழக அரசு, சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் துாய்மை பணியாளருக்கு மூன்று வேலை இலவச உணவு திட்டத்தை அறிவித்துள்ளது. இது வரவேற்கத்தக்கது.
இதனை பின்பற்றி புதுச்சேரி நகராட்சியில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் சோதனை அடிப்படையில் மூன்று வேலை உணவு இலவசமாக வழங்க முதல்வர் ரங்கசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

