வீடு கட்டும் பயனாளிகளுக்கு எம்.எல்.ஏ., நிதி உதவி வழங்கல்
வீடு கட்டும் பயனாளிகளுக்கு எம்.எல்.ஏ., நிதி உதவி வழங்கல்
ADDED : நவ 23, 2026 08:12 PM
வில்லியனுார்: வில்லியனுார் தொகுதியை பயனாளிகளுக்கு குடிசை மாற்று வாரியம் சார்பில் வீடு கட்டும் திட்டத்திற்கான நிதியை ரவிக்குமார் எம்.எல்.ஏ., வழங்கினார்.
பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் புதுச்சேரி குடிசை மாற்றுவாரிம் சார்பில் வில்லியனுார் தொகுதியை சேர்ந்த 45 பயணாளிகளுக்கு கல்வீடு கட்டுவதற்கான மூன்றாம் கட்ட தவணைத் தொகை ரூ.1:50 லட்சத்திற்கான மானிய தொகை வழங்கும் நிகழ்ச்சி இன்று (நவ.,23) நடந்தது. சட்டசபை அலுவலக வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் ரவிக்குமார் எம்.எல்.ஏ., பங்கேற்று 45 பயனாளிகளுக்கு தலா ரூ.1.50 லட்சம் வீதம் ரூ.67.50 லட்சத்திற்கான மானியத் தொகை பெறுவதற்கான ஆணையை வழங்கினார்.
நிகழ்ச்சியில் குடிசை மாற்று வாரிய இளநிலை பொறியாளர் சிவா, பணி ஆய்வாளர் இளங்கோ, முன்னாள் சேர்மன் பாலமுருகன் மற்றும் அரசு அதிகாரிகள், ஊர் முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
